நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது!
Heavy rain fall in Nagapattinam district right now
தமிழகத்தில் 29ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கேரளா மாநில அரபிக் கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக வரும் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வேளாங்கண்ணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை முதல் பரவலாக நாகை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, வேளாங்கண்ணி, பரவை, செருதூர், பொய்யூர், திருப்பூண்டி, பூவைத்தேடி உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
English Summary
Heavy rain fall in Nagapattinam district right now