தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Heavy rain likely in southern districts. Weather Center Information!
தென்மாவட்டங்களில் 11-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று 07.03.2025முதல் 09.03.2025 வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.03.2025 அன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. .
மேலும் 11.03.2025 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 12.03.2025 மற்றும் 13.03.2025 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்
வெப்பநிலை விபரம் :-

07.03.2025 முதல் 09.03.2025 வரை; தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் 3 -4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரிசெல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain likely in southern districts. Weather Center Information!