இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கனமழை எச்சரிக்கை:
நேற்று தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில், அது தற்போது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது.
இதன் காரணமாக வரும் 17 ஆம் தேதிவரை சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13.11.2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14.11.2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
15.11.2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 16.11.2024 & 17.11.2024: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே, இந்த மாவட்டங்களில் உடனடித் தீர்வு மற்றும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மேயர் ஆகியோர் தங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுகிறோம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.