தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் புதிய பாடத்திட்டமா? - அமைச்சர் பொன்முடி விளக்கம்.!
higher education minister ponmudi explain for arts and science new syllabus
தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் புதிய பாடத்திட்டமா? - அமைச்சர் பொன்முடி விளக்கம்.!
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் திட்டம் குறித்து உயர்கல்வித்து துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
சமீபத்தில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் சு.கிருஷ்ணசாமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில், ‘‘63 இளநிலை மற்றும் 135 முதுநிலை என்று மொத்தம் 298 புதிய பாடத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டங்கள் பல்கலைகழக பாடத்திட்டக் குழுக்களின் ஒப்புதலுடன் நடப்பாண்டு முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘‘தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் 100 சதவீதம் பாடத் திட்டம் ஒரே வடிவில் இருக்கும். மற்ற பாடங்களில் 75 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்கும்.
மீதமுள்ள 25 சதவீதம் பாடங்களை பல்கலைக்கழகங்கள் தங்களின் பாடவாரியக் குழு மூலம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் எதுவும் பறிக்கப்படவில்லை’’ என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
higher education minister ponmudi explain for arts and science new syllabus