மும்மொழிக் கொள்கை - பொள்ளாச்சி ரெயில் நிலைய பலகையில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு.!
hindi letters remove in pollachi railway station name board
மத்திய அரசு கொண்டுள்ள புதிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் அதனை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது.
இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை ஒதுக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இருப்பினும் மத்திய அரசும்-தமிழ்நாடு அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியாது' என்று அறிவித்தார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை தி.மு.க.வினர் கருப்பு மை பூசி அழித்தனர்.
தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை தி.மு.க.வினர் கருப்பு மை பூசி அழித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
hindi letters remove in pollachi railway station name board