இந்து கோவில் நிதி, உண்டியல் காசு வழக்கில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
Hindu Temple money case SC
தமிழக கோயில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில் நிதிகளில் முறைகேடுகள் நடப்பதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/thirunallar saneeswaran temple-9pemu.png)
மேலும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இன்னும் அறங்காவலர்கள் கூட நியமிக்கப்படவில்லை என்றும் பொதுநல வழக்கில் குற்றம் சாட்டுப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றம் இந்த கருத்தினையும், கேள்வியையும் தமிழக அரசுக்கு எழுப்பி உள்ளது.
மேலும் தமிழக கோவில்களின் நன்கொடை கல்வி நிறுவனங்கள் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/tiruvannamalai temple-drc85.png)
தமிழக திருக்கோயில்களின் நன்கொடையை நன்கொடை நிதியை சொகுசு காரியங்களுக்கு தமிழக அரசு பயன்படுத்தினால், அது தவறு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு வரும் உண்டியல் காணிக்கை மற்றும் நிதியை செலவிட ஏதேனும் திட்டம் உள்ளதா என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
Hindu Temple money case SC