எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று; தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., (HMPV)எனப்படும், 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்ற தொற்று வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன.

HMPV வைரஸ் காரணமாக, சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருந்தன.

இதற்கிடையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எட்டு மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 03 மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 02 குழந்தைகளுக்கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக, மாநில சுகாதாரத் துறை, மத்திய சுகாதாரத் துறையிடம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதியான நிலையில், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.எச்.எம்.பி.வி. வைரஸ் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச்.எம்.பி.வி. வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கலாம் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தலைவலி, சோர்வு, இருமல், காய்ச்சல் அல்லது குளிர் ஆகியவை தொற்றுக்கான அறிகுறிகள் என்று சுகாதாரத்துறையினர் அதனை கவனத்தில் கொண்டு, மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கொட்டுகொண்டுள்ளனர். இவ்வாறு அறிகுறி உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொது கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்த பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HMPV virus infection Tamil Nadu health officials advise


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->