நீண்ட காலமாக HMPV வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் இருக்கா? தமிழக அரசு தரப்பில் சொன்ன தகவல்!
HMPV Virus Tamilnadu
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் தூபத்திற்கு ஆளாக்கியது.
இந்நிலையில், சீனாவில் எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் உருமாற்றம் அடைந்த ஒரு புதிய வைரஸ் பரவி பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸ், கொரோனாவை போலவே காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து, சிறுவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்தியாவில் கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களை தொடர்ந்து சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், தமிழக சுகாதாரத் துறை இதனை மறுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் பரவக்கூடிய எச்.எம்.பி.வி வைரஸ் நீண்ட காலமாக காணப்படும் ஒரு வகை காய்ச்சல்தான். தற்போதைய பருவகால காய்ச்சல்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் இன்ப்ளுவென்சா தொற்றே அதிகம் உள்ளது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்," என்று தெரிவித்துள்ளது.