தமிழகத்திலும் முக கவசம் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் போட்ட உத்தரவு!
HMPV Virus Tamilnadu Mask
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் முககவசம் அணிவது கட்டாயமாகும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநில எல்லையில் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளதால், பரவல் அபாயத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை மற்றும் சேலம் பகுதிகளில் தலா ஒருவருக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இரண்டு குழந்தைகளுக்கும் ஹெச்எம்பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளதாக ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
HMPV Virus Tamilnadu Mask