வீடுகட்ட தவணைத் தொகை..வாய்க்கால் சீரமைக்கும் பணி..எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!
House Loan Amount Renovation of canals. Leader of the Opposition Siva inaugurated the event
புதுச்சேரி வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த 44 பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான தவணைத் தொகை ஆணையை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.இதேபோல வில்லியனூர் மாதா கோவில் வீதியில்ரூ. 33 லட்சம் செலவில் வாய்க்கால் சீரமைக்கும் பணிஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !
புதுச்சேரி அரசின் குடிசைமாற்று வாரியம் மூலம் வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த 49 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் 44 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீடு கட்டுவதற்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைத்தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டும் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
இதில், குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவிப் பொறியாளர் ரவி, இளநிலைப் பொறியாளர் அனில் குமார், பகுதி ஆய்வாளர் இளங்கோ மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், அவைத்தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன்,உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல வில்லியனூர் மாதா கோவில் வீதியில்ரூ. 33 லட்சம் செலவில் வாய்க்கால் சீரமைக்கும் பணிஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வில்லியனூர் மாதா கோயில் அருகிலிருந்து குறவர் குடிசை வரை பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு மூலம் ரூபாய் 33 லட்சத்து 41 மதிப்பீட்டில் “யூ” வடிவ கழிவுநீர் வடிகால் வாய்க்கால் சீரமைக்கம் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு வாய்க்கால் அமைக்கும் பணியை பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் ஜெயராஜ், இளநிலைப் பொறியாளர் மனோகரன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொமுச தலைவர் அங்காளன், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் கோபி, ராமதாஸ், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
English Summary
House Loan Amount Renovation of canals. Leader of the Opposition Siva inaugurated the event