சேலத்தில் வெள்ளம்!..பொதுமக்கள் கடும் அவதி!...வாகனங்கள், கடைகள் நீரில் மூழ்கியது! - Seithipunal
Seithipunal


சேலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால்,  சூரமங்கலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால் ஏரி நிரம்பியதை அடுத்து, தண்ணீர் சிவதாபுரம் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிக்கு ஆளாகினர். அங்கு ரயில்வே பாலத்தின் கீழ் 10 அடிக்கு தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக அவ்வழியாக சென்ற கார், சரக்கு வாகனம் மற்றும் டாஸ்மாக் குடோன் தண்ணீரில் முழ்கியது.  சிவதாபுரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், சித்தர் கோயில் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.

சிவதாபுரம் ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீர் மோட்டார் வைத்து அகற்றப்பட்டு வருவதாகவும்,  சிவதாபுரத்தில் தேங்கியுள்ள தண்ணீர் செஞ்சிகோட்டை வழியாக திருமணி முத்தாறு செல்லும் என்றும், தண்ணீரை வெளியேற்றும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Huge flood in salem public suffering a lot vehicles shops submerged in water


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->