கரூர் || மனைவியிடையே ஏற்பட்ட தகராறு.! கணவரின் விபரீத முடிவு.!
Husband commits suicide in karur
கரூர் மாவட்டத்தில் மனைவிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டம் ராயனூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மணிவேல்(40). இவரது மனைவி விஜயலட்சுமி(37). இந்நிலையில் மணிவேலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் ஆடிக்கடி கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த மணிவேல் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து மணிவேலை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை போல நன்றி மணிவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாந்தோணிமலை போலீசார், மணிவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband commits suicide in karur