கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு: முன்னாள் முதலமைச்சரின் மகன் விவாகரத்து கேட்டு மனு! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மாவட்டத்தின் எம்.பியுமாக இருப்பவர் ரவீந்திரநாத். இவரது மனைவி ஆனந்தி. 

இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் எம்.பி. ரவீந்திரநாத் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு விரைவில் விசாரணை நடத்த உள்ளது. எம்.பி. ரவீந்திரநாத் சமீபத்தில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுப்பதாக டி.ஜி.பியிடம் புகார் அளித்திருந்தார். 

தற்போது இவர் மனைவியுடன் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband wife between Disagreement ex Chief Minister son divorce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->