தனது அரசியல் பணியை தீவிர படுத்தப்போகிறேன்..அதிமுக முன்னாள் MLA சூளுரை!    - Seithipunal
Seithipunal


மகளிர் தின விழாவில் இருந்து தனது அரசியல் பணியை தீவிர படுத்தப் போவதாக முதலியார் பேட்டை தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  A.பாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் தொகுதி மக்கள் மக்கள் பணி செய்யும் நல்லவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி அதிமுக சார்பில் முன்னாள்  மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு A.பாஸ்கர் அவர்கள் தலைமையில் மகளிர் தின விழா சன்வே ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த அதிமுக பல்வேறு பிரிவை சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் மகளிர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது மகளிர் தின விழாவில் பேசிய நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு A.பாஸ்கர் அவர்கள் கூறியதாவது:கடந்த நான்கு ஆண்டுகளாக முதலியார்பேட்டை தொகுதி பொதுமக்கள் படும் கடும் இன்னல்களை தவிடு பொடியாக்கும் வகையில் தற்போது மகளிர் தின விழாவின் மூலம் தனது அரசியல் பயணத்தை தீவிரமாக தொடங்க உள்ளதாக தெரிவித்த அவர் கடந்த காலங்களில் வேறு ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்த நீங்கள் எதற்காக அந்த தவறை செய்தோம் என்று மக்கள் நினைப்பதாகவும் மீண்டும் அப்படி ஒரு தவறு நடக்காமல்  இருக்க தொகுதி மக்கள் மக்கள் பணி செய்யும் நல்லவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு இலவசமாக பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I am going to intensify my political work. Former AIADMK MLA


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->