ஆடல், பாடல் நிகழ்ச்சி... 7 நாளில் முடிவை தெரிவிக்க வேண்டும்... ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு...! - Seithipunal
Seithipunal


ஆடல், பாடல் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனு அளித்தால் 7 நாட்களுக்குள் பரிசீலித்து அனுமதி தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தனித்தனியே ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு விசாரணையில், திருவிழாக்களின் போது ஆடல் பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனு அளித்தால், 7 நாட்களுக்குள் பரிசீலனை செய்து காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும், அல்லது அனுமதி இல்லை என்ற எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க வில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும் என்றும், இது தொடர்பாக டிஜிபி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Icourt Madurai branch order Police to notify decision in 7 days for dance song performance


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->