மக்கள் அதிர்ச்சி! மின் கட்டணம் அதிகமானால் இப்படித் தான் செலுத்தனும்..புதிய விதிமுறை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்வாரியம், மின் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றங்களை மேற்கொண்டு பொதுமக்களுக்கு புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளது. இனி, ரூ.4000க்கும் அதிகமான மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக செலுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்குப் பதிலாக, ரூ.4000க்கும் மேற்பட்ட மின் கட்டணங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே பொதுமக்கள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் கூறியுள்ளது. இந்த மாற்றம், ஆன்லைன் சேவைகளை மேம்படுத்தி, செயல்முறையை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறையில் வரும் மாதங்களில் மேலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, ரூ.3000 மற்றும் ரூ.2000 என அலுவலகத்தில் நேரடியாக செலுத்தும் மின் கட்டணத்தின் அதிகபட்ச தொகையும் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

இதனால், அதிகபட்சமாக கட்டணங்கள் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், பொதுமக்கள் இதற்கான சரியான செயல்முறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If the electricity bill is high this is the way to pay New rule


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->