ரஜினியின் "கூலி"க்கு செக்.. சன் பிக்சருக்கு பறந்த நோட்டீஸ்.!! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் இசைஞானி இளையராஜாவின் வா வா பக்கம் வா என்ற பாடலின் இசை இடம்பெற்று இருந்தது. 

இந்த நிலையில் தனது இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா. அவ்வாறு செய்யாத பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ilayaraja sent legal notice to Sun picture for coolie teaser


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->