வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது - அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
IMD Weather Report Sep 2024
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
இந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
மேலும் இது அடுத்த 3 நாட்களில் வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
English Summary
IMD Weather Report Sep 2024