கல்குவாரி உரிமையாளரை உடனடியாக கைது செய்க - பிரேமலதா விஜயகாந்த்!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளிட்டுள்ளார். அறிக்கையில் அவர் குறிவுள்ளதாவது :-

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழஉப்பிகுண்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பாறை உடைக்கும் பனையில் ஈடுபட்டபோது பேட்டி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிர் எழுந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிகழ்வு மிகப்பெரிய மன வேதனையை உண்டாக்கி இருக்கிறது. உடனடியாக தமிழக அரசு இந்த கல்குவாரி  உரிமையாளரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு தக்க சன்மத்துடன் வேலைவாய்ப்பினை அளித்து, இது போன்ற நிகழ்வுகள் இனியெங்கும் நிகழ்யாமல் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசினுடைய கடமை. மேலும், தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தேதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Immediately arrest Kalquari owner Premalatha Vijayakanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->