தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு..இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!
Important decision on constituency reshuffle. MK Stalin to chair all-party meeting today
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.இந்த அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு 2026 நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இந்தநிலையில் இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
இதையடுத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று புதன்கிழமை சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சிகள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்றைக்கு நடைபெறுகிறது. அப்போது கூட்டம் தொடங்கியதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச இருக்கிறார். இதையடுத்து தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவர் கருத்துகளை தெரிவிக்கிறார். மேலும், கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை முன்மொழிந்தும் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
அதனை தொடர்ந்து, அனைத்து கட்சி தலைவர்களும் தீர்மானத்தின் மீது அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து முடித்தவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். முடிவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். சுமார் 4 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
English Summary
Important decision on constituency reshuffle. MK Stalin to chair all-party meeting today