பூத்துக்குலுங்கும் சிலுவை பூக்கள்..! கண்களுக்கு விருந்தாகவும்.. மனதிற்கு மருந்தாகவும்..!! உடனே செல்லுங்கள்.!!
in dindigul siluvai flowers awesome to view tourist
நமது இந்திய நாட்டில் உள்ள மாறுபட்ட காலநிலையில் காரணமாக நாம் பெரும் மகிழ்ச்சியடைந்து வருகிறோம். நமது மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பூக்கள் அவ்வப்போது பூத்து குலுங்கும்.
இவ்வகையான பூக்கள் பூத்து குலுங்கும் காட்சியை காணும் நேரத்தில் மனம் சொல்லிக்கொள்ள தெரியாமல் உற்சாகமடைவது வழக்கம். அந்த வகையில்., தமிழகத்தில் சாலையோரங்களில் கூட சீசன் நேரத்தை பொறுத்து பூக்கள் பூத்து குலுங்கும்.
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் சிலுவை பூக்கள் பூத்து குலுங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் டிசம்பர் மாதத்தின் போது சிலுவை பூக்கள் பூத்து குலுங்கும்.
டிசம்பர் மாதம் துவங்கி 17 நாட்கள் கடந்துள்ள நிலையில்., இதனை காணுவதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து கண்டு செல்கின்றனர். மேலும்., அங்குள்ள பிரையண்ட் பூங்கா பகுதியில் அதிகளவு மலர்கள் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in dindigul siluvai flowers awesome to view tourist