டிஎன்பிஎஸ்சி தேர்வில் காலியிடங்கள் 651-லிருந்து 992 ஆக அதிகரிப்பு: புதிய அறிவிப்பு
Increase in TNPSC Exam Vacancies from 651 to 992 New Notification
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் காலியிட எண்ணிக்கையை 651-ல் இருந்து 992 ஆக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
உதவி பொறியாளர் (சிவில்), வேளாண் அதிகாரி, புள்ளியியல் ஆய்வாளர், மருந்து ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற்றன.
முன்னதாக 651 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது புதிய 341 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் (சிவில்): 45 இடங்கள்.தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உதவி பொறியாளர் (சிவில்): 35 இடங்கள்.தாட்கோ உதவி பொறியாளர் (சிவில்): 15 இடங்கள்.கணினி இயக்குநர் மற்றும் தடுப்பு மருந்து ஸ்டோர்-கீப்பர்: 11 இடங்கள்.
இப்பணியிடங்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நிரப்பப்பட்டுவந்த நிலையில், தற்போது முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதன்மூலம் புதிய காலியிடங்களில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிக வாய்ப்பு பெறுவார்கள்.
விரிவான தகவலுக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.
English Summary
Increase in TNPSC Exam Vacancies from 651 to 992 New Notification