மக்களே உஷார்! எமனாகும் இரு சக்கர வாகனம்! குறிப்பாக தமிழக மக்கள் கவனத்திற்கு! - Seithipunal
Seithipunal


கடந்த 2023 ஆம் ஆண்டு நாடு நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகள் குறித்த ஆய்வு அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையின் படி நாடு முழுவதும் அதிக சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உத்திரபிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 

மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டு, மூன்றாம் இடங்களை உள்ளன. 

அதே சமயத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் அதிக படுகாயம் அடைந்தவர்களின் பட்டியலில் தமிழ்நாடு மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 72292 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் 55 ஆயிரத்து 769 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மூன்றாவது இடம் கிடைத்துள்ள கேரள மாநிலத்தில் 54,320 பேர் சாலை விபத்துகளில் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் அதிகமாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களே அதிக விபத்துகளை சந்தித்துள்ளனர். 

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 44% பேர், கிட்டத்தட்ட 76 ஆயிரம் பேர் இருசக்கர வாகனத்தில் சென்று, சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும் இந்த விபத்துகளில் சிக்கியவர்களில் 70% பேர் தலைக்கவசம் அணியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டும் மக்கள் தலைக்கவசம் அணிவதுடன், கூடுதலாக தங்களது பாதுகாப்பை உறுதி செய்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் சாலை விபத்துகளை தடுக்கவும், குறிப்பாக இருசக்கர வாகன விபத்துகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக புதிய விதிகள் ஏதேனும் கொண்டு வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Road Accident Report Tamilnadu in worst


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->