உலக அரங்கில் இந்தியா வல்லரசாக உருவெடுக்க அனைவரும் உறுதியோற்போம் -இந்திய தேசிய லீக் வாழ்த்து..!
INL Republicday Wish
வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்க குடியரசு தின நன்னாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என இந்திய தேசிய லீக் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது,
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்து களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அரசியல மைப்பு உருவாவதற்கு உன்னதப் பங்களிப்பு செய்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சட்டம் இயற்றிய மேதைகள் யாவரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.
நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல் அனைத் தையும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாக அர்ப்பணித்திட இந்நன்னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம். இந்திய அரசி யல் அமைப்பின் உன்னத குறிக்கோளைப் பாதுகாத்திடும் வகையில் நம் வாழ்வின் மூச்சு, செயல் ஆகியவற்றை அர்ப்பணித்து, தேசத்தின் பெருமையைக் கட்டிக்காப்பதில் தொடர்ந்துமுன்னேறிச் செல்ல முன்வருவோம்.
உலகஅரங்கில் இந்தியாவை ஜன நாயக நாடாக தேசத் தந்தை காந்தியடிகள், சட்ட மாமேதை அம்பேத்கர் போன்ற எண்ணற்ற அறிஞர்களின் அறிவாற்றலால் உருவான இந்திய குடியரசு சட்டம் பல நாடுகளுக்கு முன்மாதிரியாக இன்றளவும் போற்றப்பட்டு வருவதே ஒவ்வொரு இந்தியரின் பெருமை. இந்திய குடியாட்சி தத்துவத்தின் அருமை, பெருமைகளை உணர்ந்து அதற்கு கடமையாற்றுவதே நமக்கு பெருமை. நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
73-வது குடியரசுத் திருநாளை கொண்டாடும் இவ்வேளையில், அரசியல் சட்டத்தின் மாட்சிமைக்கும் - மக்களாட்சியின் கண்ணியத்துக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதை இந்த நன்னாளில் நம் அனைவரும் உறுதி ஏற்று, உலக அரங்கில் இந்தியா வல்லரசாக உருவெடுக்க அனைவரும் உறுதியோற்போம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.