தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை!...படகுகளை வாங்கி குவித்த சென்னை மாநகராட்சி! - Seithipunal
Seithipunal


தமிழத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது

வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகும் என்பதால், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சொந்தமாக 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக 2 படகுகள் மாதவரம் மற்றும் பெருங்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவசர கால தேவைகளுக்காக மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வடகிழக்கு பருவமழை காலத்தில் நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள தன்னார்வலர்கள்  https://gccservices.chennaicorporation.gov.in/volunteer என்ற இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Intensifying northeast monsoon chennai corporation has bought and accumulated boats


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->