தமிழ்நாடு அரசு கூடுதல் செயலாளரின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை.!!
Interim stay on jail sentence imposed on TNgovt Additional Secretary
கடந்த 2019 ஆம் ஆண்டு கல்வித்துறை சார்ந்த பண பலன்களை வழங்க கோரி ஞானபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய நிலையிலும் அதிகாரிகள் அதனை செயல்படுத்தவில்லை எனக் கூறி மனுதாரர் ஞானப்பிரகாசம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த ஜூலை 13ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது பிரதீப் யாதவ் நேரில் ஆஜராக வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் தற்பொழுது தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை கூடுதல் செயலாளராக பணியாற்றி வரும் பிரதீப் யாதவ் ஆஜராகாததால் இந்த வழக்கு விசாரணை நேற்று வந்த போது இவருடன், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இயக்குனர் முத்து பழனிச்சாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் பூபாலன் ஆண்ட்ரோ ஆகிய மூன்று பேரையும் 2 வாரங்கள் சிறையில் அடைக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இரு நபர் அமர்வில் முன்பு அவசர வழக்காக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மின்சாரத் துறை கூடுதல் செயலாளர் பிரதீப் யாரோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Interim stay on jail sentence imposed on TNgovt Additional Secretary