முதலீட்டாளர்கள் மாநாட்டில் மன்னிப்பு கேட்ட முகேஷ் அம்பானி!
InvestIn TN mukesh Ambani
தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என்பதற்காக காணொளி வாயிலாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள், 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மாநாட்டில் காணொலி வழியே உரையாற்றிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும், மின்வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல பிரிவுகளில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
English Summary
InvestIn TN mukesh Ambani