திருமாவளவனுக்கு சடங்கு., அர்ஜுன் சம்பத் புதிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பு திருமாவளவன் அயோத்தி தீர்ப்பு குறித்து பேசினார். அப்போது, பாபர் மசூதி இருந்த இடத்தில் தொல்லியல் துறை நடத்திய ஆராய்ச்சியில் அதற்கு முன்பே கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டிருக்கின்றனர். அது என்ன கோவில் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் கட்டமைப்பை வைத்து அது என்ன கோவில் என்பதை நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

குவிமாடம் இருந்தால், அது மசூதி, கூம்பு வடிவம் ஆக இருந்தால் அது தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் நிறைந்து இருந்தால், அது இந்து கோவில் என தெரிவித்தார். இந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நான் பாஜகவுக்கு எதிராக தான் பேசினேன். இந்துகளுக்கு எதிராகப் பேசவில்லை என்று தெரிவித்தார்.

Image result for thirumavalavan seithipunal

இந்நிலையில், திருமாவளவனை இந்து சமயத்திலிருந்து விலக்கி வைப்பதாக இந்து மக்கள் கட்சி சார்பில் விழா ஒன்று நடைபெற இருக்கின்றது. 

அதில் கள்ளகுறிச்சி உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்து கோவில்கள் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிவரும் திருமாவளவனை இந்து சமயத்திலிருந்து சம்பிரதாய சடங்கு மூலம் விலக்கி வைக்கும் நிகழ்வு நடக்க இருப்பதாக பத்திரிகை ஒன்று அடித்து பலருக்கும் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த பத்திரிகையின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வில் இந்து சமய ஆர்வலர்கள், சிவனடியார்கள், ஆன்மீக வாதிகள் என பலரும் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

invitation about thirumavalavan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->