மகா விஷ்ணுவின் பின்னணியில் இருப்பவர் இவரா?...திருப்பூரில் போலீசார் அதிரடி விசாரணை! - Seithipunal
Seithipunal


சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில், மகா விஷ்ணு என்பவர் பாவ புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு, முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என்று பேசிய இவரின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்தார்.

தொடர்ந்து இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மகா விஷ்னுவை புழல் சிறையில் அடைத்தனர்.


இந்த நிலையில், சைதாப்பேட்டை போலீசார் மகா விஷ்ணுவை  திருப்பூர் அழைத்து சென்றுள்ள நிலையில், அங்கு  உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில் வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் மகா விஷ்ணுவின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? யாருடைய தூண்டுதலின்பேரில் அவர் பேசினார்? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே மாற்றுத்திறனாளி ஆசிரியர் அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் 25ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பித்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is he the person behind Maha Vishnu Police action investigation in Tirupur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->