வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர் விடுபட்டுள்ளதா?....இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்!
Is your name missing in the voter card draft voter list is released today
ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதியை மையமாக வைத்து 18 வயது பூர்த்தியடைந்தோருக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இதற்கு முன்னதாக பழைய வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும். இந்த திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு எதுவாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் இன்று காலை 10 மணிக்கு வெளியிட உள்ளனர்.
இதில், கடந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு, மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண் வாக்காளர்களும், 8,465 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் இதில் உள்ள மாற்றங்கள் இன்று வெளியாக இருக்கும் வரைவு பட்டியலில் தெரிய வர உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு பின்னர், திருத்தப் பணிகள் நடைபெறும் போது, வாக்காளர் அனைவரும் தங்கள் பெயர் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை வரைவு பட்டியலை பார்த்து சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் வரும் ஜனவரி 1-ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அது மட்டுமல்லாமல், பழைய வாக்காளர்கள் முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை இந்த காலகட்டத்தில் எளிதாக மேற்கொள்ள 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
English Summary
Is your name missing in the voter card draft voter list is released today