#தேனி || பிரபல தொழிலதிபர் தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் ஏ.எம்.ஆர் சந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான மகாராஜா பருப்பு ஏற்றுமதி நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அனைத்து வகையான பருப்புகளையும் விநியோகம் செய்கிறது. 

அதேபோன்று வெளிநாடுகளுக்கு உயர் தர பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்கிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் தேனியில் உள்ள சந்திரசேகுமாருக்கு சொந்தமான வீடு, பருப்பு மில், அலுவலகம் என சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

பருப்பு ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், தவறான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சோதனையானது அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT raid in Theni businessman house and offices


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->