என்னை கை கொடுத்து தூக்கி விட்டது அஜித் சார்தான்.. இயக்குனர் மகிழ்திருமேனி புகழாரம்!
It was Ajith sir who lifted me by the hand Director Magizh Thirumeni praises
அஜித் சார் கை கொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் என விடாமுயற்சி இயக்குனர் மகிழ்திருமேனி கூறியுள்ளார்.
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி படம் அடுத்த மாதம் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், மோகன்லால் நடித்திருக்கும் எல் 2 எம்புரான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில், படக்குழுவினருடன் விடாமுயற்சி இயக்குனர் மகிழ்திருமேனியும் கலந்துகொண்டார். அப்போது விழாவில் அவர் பேசுகையில்,"அஜித் சார் கை கொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் எனக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி என்றும் பிப்.6-க்காக காத்திருக்கிறேன் என்றும் அந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறேன்"என கூறினார் .
English Summary
It was Ajith sir who lifted me by the hand Director Magizh Thirumeni praises