சென்னையில் ED உடன் களமிறங்கிய IT.. அதிரடி சோதனை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று காலை முதல் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் மற்றும் ஆடிட்டிங் நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது சென்னை பள்ளிக்கரணை பகுதியில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை 200 அடி சாலையில் லிங்கராஜ் என்பவருக்கு சொந்தமான கான்கிரீட் ரெடிமிக்ஸ் மற்றும் ஜல்லி மணல் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

 

லிங்கராஜ் வீட்டில் இன்று காலை சோதனை செய்த வருமானவரித்துறை அதிகாரிகள் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது நிறுவனத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பண பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த பணமா என்ற கோணத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITRaid in construction company in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->