டிச.28ல் அதிரப்போகும் தலைமை செயலகம்! ஜாக்டோ ஜியோ எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 28ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முட்டையிடும் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "ஜாக்டோ ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது.

அதன்படி வரும் டிசம்பர் 28ஆம் தேதி அறிவித்த படி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுக அறிவித்த உறுதிமொழிகளை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொய்த்து விட்டது.

அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகை மூன்று முறை மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்ற வில்லை. அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின் போது எங்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும் என கூறியும் தற்போது வரை நிறைவேற்றவில்ல.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ஐந்து மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில் கூட தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. ஏற்கனவே அரசு ஊழியர்களின் சரண்டர் விடுப்பு காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை. இதன் காரணமாக திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 28ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். அந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jacto geo decided to lay siege to Chennai secretaries on dec 28th


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->