#புதுக்கோட்டை || முதல்வர் மு.க ஸ்டாலினுக்கான ஜல்லிக்கட்டு பாராட்டு விழா ரத்து..!! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து வரும் ஜூன் 5ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு ஜல்லிக்கட்டு அமைப்பினர் சார்பாக பாராட்டு விழா எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜல்லிக்கட்டு அமைப்பினர் மேற்கொண்டு வந்தனர்.

மேலும் புதுக்கோட்டை செல்லும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில்  மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்ற பொழுது நேற்று மாலை சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் அவ்வழியாக வந்த ஹவுரா மோதி விபத்துக்குள்ளானது.

அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் தற்போது வரை 288 பேர் பலியான நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் வரை பலியாகி இருப்பதாக வருவாய் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்று ஒரு நாள் தமிழக முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் திமுக சார்பில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யவுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த வகையில் புதுக்கோட்டையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ஜூன் 5-ம் தேதி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த பாராட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராட்டு விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jallikattu appreciation ceremony for CM MKStalin cancelled


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->