மதுரை மாட்டுத்தாவணி சந்தையில்.. பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
Jasmine flowers price in madurai market
மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
மதுரையின் அடையாளமாக திகழ்வது மல்லிகைப்பூ. அந்த வகையில் மதுரை மல்லிகை பூவிற்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. திருவிழா, சுப முகூர்த்த தினங்களில் மல்லிகை பூவின் விலை உச்சத்தை தொடும்.
இந்த மல்லிகை பூ மதுரை திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. விற்பனை மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் மதுரை மல்லி கிலோ 200 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் சில பூக்களின் விளையும் இன்று அதிகரித்துள்ளது. முல்லைப் பூ கிலோவுக்கு 400 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோவுக்கு 500 ரூபாய்க்கும், சம்பங்கி பூ 120 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
Jasmine flowers price in madurai market