ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரம் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
jeyakumar murder case postmodern report
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார், கடந்த இரண்டாம் தேதி மாயமானதையடுத்து, அவரது உடல் 4ஆம் தேதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில், நுரையீரலில் எந்த திரவமும் இல்லாததால், ஜெயக்குமார் இறந்த பின்னரே எரியூட்டப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த வாரம் போலீசாருக்கு வழங்கப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகள், நிபுணர்களின் கருத்திற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த முடிவில், ஜெயக்குமார் உயிரிழப்பதற்கு முன்பு 4 முதல் 5 மணிநேரம் வரை, அடித்து துன்புறுத்தப்பட்டதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கை, கால்கள் கட்டப்பட்டு, உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டு, வயிற்றில் இரும்பு தகடு, கல் போன்றவற்றை வைத்து எரியூட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து உடல் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதி உள்ளதால், சடலத்தை நீரில் வீச திட்டமிட்டு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
English Summary
jeyakumar murder case postmodern report