சமையல் உதவியாளர் பணி.. விண்ணப்பிக்க கால அவகாசம் அறிவிப்பு!
Job as a Cook Assistant Deadline to apply
திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் உதவியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம்.
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு கால முறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ –குள் இருக்க வேண்டும். (ஊராட்சி – குக்கிராமம்- வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை)
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,மாநகராட்சி, நகராட்சி அலுவலகத்தில் பெற்று மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.04.2025 அன்று மாலை 5.45 மணி வரையில் (அலுவலக வேலை நாட்களில் மட்டும்) விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்கப்பட வேண்டும். நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
English Summary
Job as a Cook Assistant Deadline to apply