கபடி போட்டியில் பங்கேற்ற வாலிபர் மாரடைப்பால் மரணம்.!
Kabaddi player heart Attack death in karur
சமீப சில நாட்களாக நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் அந்தந்த மேடைகள் மற்றும் மைதானங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும், குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடைபெற்ற கபடி போட்டியில் மாணிக்கம் என்ற 26 வயது இளைஞர் பங்கேற்று உள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது சுற்று போட்டிக்காக ஓய்வு எடுத்திருந்த நிலையில் திடீரென நெஞ்சு வலிப்பதாக தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த இளைஞருக்கு ஏற்கனவே இதய கோளாறு இருந்ததாகவும் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Kabaddi player heart Attack death in karur