பரபரப்பு - தென்காசியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு.!!
boy body found in thenkasi
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில்-நெல்லை சாலை அருகே சின்னக்கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலைத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், நெல்லையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தில் இருந்து எலும்புகளை சேகரித்து சம்பவ இடத்திலேயே ஆய்வு செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. அரவிந்த் நேரில் சென்று இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பகுதியில், எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boy body found in thenkasi