போக்சோ குற்றங்களை தடுக்க நிமிர் திட்டம்..கன்னியாகுமரியில் அறிமுகம்!  - Seithipunal
Seithipunal


போக்சோ​ குற்றங்களை முன் கூட்டியே தடுக்க வகையில் விரைவில் "நிமிர்" திட்டம் துவங்கி உள்ளதாக     மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின்  பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு முதல் நான்கு மாதத்தில் நடைபெற்ற கொலை கொலை, விபத்து உயிரிழப்புகள் இந்த ஆண்டு 60 விழுக்காட்டிருக்கும் கீழ்  குறைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக "நிமிர் திட்டம்" என்ற பெண்கள் பாதுகாப்பு திட்டம்  அறிமுகம் செய்தார். 
 
குழந்தைகளுக்கு கோடைகால விடுமுறை  விடப்பட்டிருப்பதால், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போக்ஸோ உள்ளிட்ட குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் "நிமிர்"என்ற திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளேன் என்றும் தீவிர போக்சோ விழிப்புணர்வு பிரச்சார இயக்கம்  (நிமிர்) என்ற தலைப்பில் செயல்படும் எனவும் இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரப்புற கிராமப்புறங்களுக்கு சென்று தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். 

இந்த திட்டத்தின் நோக்கம் ஒரே ஒரு பெற்றோர் மட்டும் இருக்கும் குழந்தைகள், கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களின் குழந்தைகள், முன்பாக போக்சோ  குற்றங்கள் அதிகமாக நடந்த இடங்கள் இலக்காக நிர்ணயித்து இப்பிரச்சாரம் தீவிர படுத்தப்படும் எனவும். இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு   மாவட்ட ஆயுதப்படையில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பயிற்சியினை தொடங்கி தொடங்கி வைத்து திட்டத்தை நோக்கம் பற்றி விவரித்தார். 

இதில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  மதியழகன், தடைய அறிவியல் உதவி இயக்குனர்  மினிதா,சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  எவர்லின் சுபா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்  மஞ்சு, ADP ஜீவா, APP பாலகிருஷ்ணன், இளம் சிறார் நீதி குழும உறுப்பினர்கள்  ஜாஸ்மின் மற்றும் தங்க ஜமீலா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nimirs plan to curb POCSA crimes Debut in Kanyakumari


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->