இந்திய அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும்; அமெரிக்க துணை ஜனாதிபதி..!
The United States will provide all necessary assistance to the Government of India US Vice President
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இந்தியாவிற்கு 04 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார். அவருடன் அவர் மனைவி உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஜம்மு- காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜே.டி.வான்ஸ், "பயங்கரவாத தாக்குதலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் தானும் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
The United States will provide all necessary assistance to the Government of India US Vice President