நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளாரா காளியம்மாள்? - அழைப்பிதழால் ஏற்பட்ட குழப்பம்..!
kaliyammal leave ntk party confusion over invitation
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், எளிய மீனவர் குடும்பத்தில் இருந்து தனது பேச்சுத்திறமை மூலம் அரசியலில் தனக்கென ஓர் இடத்தை பெற்றவர். ஆனால், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் காளியம்மாளுக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சில ஆடியோக்கள் வெளியாகி இருந்தன.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவதாக காளியம்மாள் முடிவெடுத்துவிட்டதாகவும், அடுத்து எந்த கட்சிக்கு செல்வது? என்பது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என்று காளியம்மாளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காளியம்மாளின் பெயருக்கு பின் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளாரா? அல்லது விலகியுள்ளாரா? என்ற குழப்பம் நிலவுகிறது.
இது குறித்து காளியம்மாளிடம் கேட்டபோது, தனது நிலைப்பாடு குறித்து இன்று விளக்கம் அளிப்பதாக அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
kaliyammal leave ntk party confusion over invitation