#BREAKING: கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் மேலும் இரு முக்கிய புள்ளிகள் கைது!
Kallakurichi kallacharayyam case update
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷமரண விவகாரத்தில் மேலும் இரண்டு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், முருகேசன் ஆகிய இருவரை இன்று காலை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பின்னணி குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, கைது செய்யப்பட்ட இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலருக்கு கண் பார்வை பறிப்பை உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே நேற்று விழுப்புரம் அருகே புதுச்சேரிகளில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை குடித்ததில் பதினோரு பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராயத்தால் மரணங்கள் ஏற்படாத வகைகள் தமிழக அரசும் காவல்துறையும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே கள்ளச்சாராயம் கொடுத்து உயிர் இழந்தவர்களுக்கு தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம் வழங்கியது தவறான முன்னுதாரணம் என்று, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kallakurichi kallacharayyam case update