மயிலாடுதுறையில் பரபரப்பு - சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 மாணவர்கள் கொலை!
two college students murder in mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் அருகே முட்டம் கிராமத்தில் மூன்று பேர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் சாராய விற்பனை குறித்து தட்டிக் கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன், கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பூ, போலீசார் மேற்கொண்ட சோதனையின்போது, ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
![](https://img.seithipunal.com/media/crime kjsd-zy8zv.png)
இதையடுத்து ஜாமீனில் வெளி வந்த ராஜ்குமார் மீண்டும் சாராய விற்பனையை தொடங்கியுள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் தட்டிக்கேட்டுள்ளார். அவரை ராஜ்குமார் தாக்கியுள்ளார். இதை பார்த்த ஹரிசக்தி என்ற கல்லூரி மாணவரும், ஹரிஷ் என்பவரும் சேர்ந்து ராஜ்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர்.
உடனே ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரும் சேர்ந்து இளைஞர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://img.seithipunal.com/media/crime 11-eyq4k.png)
இதற்கிடையே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி மாணவர் மற்றும் இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two college students murder in mayiladuthurai