விரைவில் சினிமாவை விட்டு விலகுகிறாரா இயக்குனர் மிஸ்கின்..? அவரே சொன்ன பதில்..!
Director Mysskin will soon leave cinema
இயக்குனர் மிஷ்கின் என்றாலே நினைவுக்கு வருவது அவர் இயக்கிய சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட தனித்துவமான படங்கள் தான்.
இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நந்தலாலா, சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் தேர்ந்த நடிகராகவும் வலம் வந்தவர். கடைசியாக இவர் நீதிபதியாக நடித்த பாலாவின் வணங்கான் படத்தில் சிறந்த நீதிபதியாக நடித்து சத்தி இருப்பர். அசத்தி இருப்பார். தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்திலும் இவர் நடித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/miskin 1-spld6.jpg)
பிப்ரவரி 21-ஆம் தேதி திரைக்கு வரும் 'டிராகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், 'பேட் கேர்ள்' பட சர்ச்சை குறித்து பேசினார். அதாவது 'பேட் கேர்ள்' படம் எடுத்தது ஒரு பெண். டிரெய்லரை வைத்து ஒரு படத்தை முடக்குவதில் நியாயமே இல்லை. ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் இயக்குநர் ஆவது மிகவும் முக்கியமான ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
திரைப்படத்தின் டிரெய்லரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாக பெண் கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளமை மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்த கூடிய காட்சி அமைப்புகள் என்பன உள்ளதாக அந்த படத்தை தடை செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் இவ்வாறு பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![](https://img.seithipunal.com/media/miskin-t3xu4.jpg)
இந்த இசை வெளியீட்டு விழாவில் மேடையில் இருந்த திரையில் படக்குழுவினர் ஒவ்வொருவரின் புகைப்படங்களாக காட்டி இயக்குநர் மிஷ்கினிடம், அவர்கள் குறித்து ஒரு வரியில் தொகுப்பாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த மிஷ்கினின் "விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்" என்று ஒருவரியில் பதில் கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில், மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2, விஜய் சேதுபதி நடிப்பில் 'டிரெயின்' ஆகிய படங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Director Mysskin will soon leave cinema