"யப்பா.. எங்கள விட்டுருப்பா" ஸ்டாலின் அப்பா... விமர்சனத்துக்கு உள்ளான அப்பா!  - Seithipunal
Seithipunal


உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில் மக்கள் தன்னை அப்பா என்று அழிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி யாரும் உங்களை அழைக்கவில்லை, நீங்களே உங்களை அப்பா என்று அழைக்க சொல்வது போல உள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் சில பதிவுகள் பின்வருமாறு:

Mr.பழுவேட்டரையர் (தமிழ் தேசிய அரசியல் விமர்சகர்)

Dear Stalin, மக்கள் உங்கள அப்பானு எங்கேயும் அழைக்கல..
தமிழ்நாடே உங்கள பார்த்து "யப்பா.. எங்கள விட்டுருப்பா"னு தான் கத்துது 😂😂

ஷாலின் மரியா லாரன்ஸ் (தலித் செயல்பாட்டாளர்)

"யப்பா டேய்... போதும் டா உங்க திராவிட மாடல் உருட்டு" என்பதுதான் "அப்பா" "அப்பா" என்று கேட்டு இருக்கும் .

சம்பத் குமார் (தமிழக வெற்றிக் கழகம்):

அப்பா, அப்பா, அப்பா
சட்டம் ஒழுங்கு அடேங்கப்பா, 
சாராய விற்பனை சூப்பரப்பா, 
தட்டிக்கேட்டா வெட்றாங்கப்பா, 
தக்க நடவடிக்கை எடுங்கப்பா,
வீடியோ ஷீட் போதுமப்பா, 
வேலையைப் போய் பாருங்கப்பா.

தமிழ் பொக்கிஷம் : முதல் முறையாக அரசியல் அப்பா அம்மா விளையாட்டை ட்விட்டரில் பார்க்கிறேன்..."அம்மா" அது மக்களால் கொடுக்கப்பட்டது, "அப்பா" மக்களுக்குள் திணிக்கப்பட்டது #Appa #திணிக்கப்படும்_அப்பா

வினோதினி வைத்தியநாதன் (முன்னாள் மநீம கட்சி நிர்வாகி): போலீஸ் அராஜகம் ஒழிக! இது என்னமாதிரியான செயல் காவல்துறை? 

வயதான அம்மாவை போட்டு இப்படித்தள்ளிவிடுகிறாரே, அப்பா! (மாண்புமிகு முதலமைச்சரைத்தான் அப்பாவென்று விளிக்கிறேன்). மக்களுக்கு அரணாக இருக்கவேண்டிய காவல் துறையினரே இவ்வாறு நடந்துகொண்டால்?

1. அம்மூதாட்டி யார்? அச்சிறுவன் யார்? அவர்கள் தவறு செய்திருந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதை விடுத்து ஏன் தனி மனித தாக்குதல் செய்தார் இந்த அதிகாரி?

2. உளுந்தூர்பேட்டை காவல் துறையைச் சேர்ந்த இந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ததாக கள்ளக்குரிச்சி காவல்துறை செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். துறை ரீதியான நடவடிக்கை சரி, ஆனால் இவர் மீது சட்ட ரீதியான வழக்கு பாயுமா?  பாரதீய நியாய சன்ஹிதாவின் Causing grievous hurt மற்றும் பல பிரிவுகளின் அடிப்படையில் suo motoவாக இவ்வழக்கை எடுத்துக்கொண்டு இவருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டாமா?

4. பணியிடை நீக்கம் செய்தல் போதுமானதா? காவல் உடைக்கு இழுக்கு விளைவித்தவருக்கு “இடை” நீக்கம் தானா? அப்பொழுது பொது மக்கள் குற்றம் செய்தால் அவர்களது பணியிடத்தில் சொல்லி வேலை போகச்செய்தால் போதுமானதாக இருக்குமே! எதற்கு தண்டனை!

5. பிரபலங்களுக்கு Y security, பொது மக்களுக்கு “Why security?” அப்படித்தானே?

6. காவல் துறையில் மிகச்சிறந்த அதிகாரிகளும் உள்ளனர். தமிழ்நாட்டு காவல் துறை என்றாலே மிடுக்கும், மனிதமும் கலந்தவர்கள் என்று நாம் மார்தட்டிக்கொள்ளும் வகையில் செயல்பட்டுவரும் பலருக்கு மத்தியில் இப்படி சிலரின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த துறைக்குமே பெரும் அவமானம்.

6. அரசியல், சாதி, மத சார்புகள் தாண்டி காவல்துறையினர் செயல்பட வேண்டும்.

7. இச்சம்பவத்தில், கள்ளக்குரிச்சி மற்றும் தமிழ்நாடு காவல்துறை இந்தத் துரையின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், அந்த வயதான அம்மாவைக் கண்டறிந்து முதல்வர் அவர்கள் மக்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து தகுந்த மருத்துவ உதவி மற்றும் உடல் நலம் பெருவதற்கான பொருள் உதவி செய்து சமூக நீதி காக்க வேண்டுகிறேன்.

8. காவல்துறையினர் இப்படி மிகுந்த கோபத்தோடும் கண்மண் தெரியாமல் நடக்கும் rageful incidents தொடராமல் இருக்க, அவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு ஆண்டு பட்ஜெட்டில், psycho therapy, psychiatric treatment, psychological counselling, yoga, meditation போன்ற therapyக்களுக்கு நிதி ஒதுக்குமாறு தமிழக அரசைக்கேட்டுக்கொள்கிறேன். பொது மக்களையே இப்படி போட்டு பொளக்கும் இவர் போன்றவர்களின் வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகளை நினைத்தால் பதட்டமாக இருக்கிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin Appa DMK Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->