கள்ளசாராய மரணங்கள்: தமிழக அரசுக்கு குட்டு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் கடந்த வருடம் மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தில் தமிழக அரசு எடுத்து நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வருகின்ற 26ம் தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தின் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தோல்வியடைந்துள்ளது.

50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு மரக்காணத்தில் இதேபோல் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் பலியாகினர். 

அந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கள்ளச்சாராயம் விற்பனை குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும், சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் தமிழக அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை பொருத்தவரை புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கலந்த கலாச்சாராயம் கொண்டுவரப்பட்டுள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

மரக்காணத்தில் 14 பேர் கள்ளச்சாராயத்தால் பலியாகினர்.  இதில் 21 பேர் கைது செய்யப்பட்டு எட்டு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 16 காவல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து நீதிபதிகள், மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து அரசன் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு வந்த பிறகும் கடந்த ஓராண்டாக தமிழக அரசு எடுத்துள்ளது.

மரக்காணம் சம்பவத்தில் தமிழக அரசு ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தற்போது வரை கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு முன்பாக ஊடகங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. அப்போது மாவட்ட நிர்வாகம் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது. அப்போதே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும் என்று கூறிய நீதிபதிகள், கள்ளக்குறிச்சி, மரக்காணம் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Marakanam Kallasaram Case Chennai HC Order ADMK DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->