#BREAKING || கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை என வந்த தீர்ப்பு.. ஸ்ரீமதி அம்மா எடுத்த அதிரடி முடிவு.? - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையை சுட்டிக்காட்டி இது தற்கொலை தான் என  நீதிபதி இளந்திரையன் நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும், மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தின் படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்றும், நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மாணவி மாடியிலிருந்து விழும்போது மரத்தில் அடிபட்டு, உடலில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், நீதிபதி தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவியின் ரத்தக்கரை இல்லை என்றும், அது வண்ண பூச்சி என்றும் நிபுணர்கள் அறிக்கை தெரிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மாணவி ஸ்ரீமதி மரணத்தின் பின்னணியில் பலாத்காரமும் இல்லை, கொலையும் இல்லை, தற்கொலை தான் என நீதிமன்றம் கூறியிருந்தது. மாணவர்களை படிக்குமாறு ஆசிரியர்கள் கூறுவது தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார்.

மாணவியின் தற்கொலை கடிதத்தின்படி யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஜாமின் வழக்கு விசாரணையில், ஸ்ரீமதி மரணம் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து முறையீடு செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi school girl's verdict was suicide parents case filed supreme court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->