ரோடு போட்டதா கணக்கு காட்டு! மறுத்த அதிகாரியை அடித்து உதைத்த திமுக பிரமுகர்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆத்தூர் அருகே சாலை பணியை முடிக்காமலேயே மூன்று லட்சம் ரூபாய் பில் தொகையை தரக்கோரி, அரசு அதிகாரியை அடித்து உதைத்து மிரட்டிய திமுக பிரமுகரின் காணொளி, சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாலை அமைக்க 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதற்கான ஒப்பந்தத்தை திமுக பிரமுகர் சுப்பிரமணியன் பெற்றுள்ளார். சாலை பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், சாலை பணி முடிந்தது போல பில் போட்டு, தொகையைத் தரக்கோரி திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளரை கேட்டு தகராறு செய்துள்ளார் திமுக பிரமுகர்.

நீங்கள் சாலை பணியை முடித்தால் தான் நான் தொகையை விடுவிப்பேன் என்று பொறியாளர் தெரிவிக்க, இதனால் ஆத்திரம் அடைந்த திமுக பிரமுகர் தகாத வார்த்தைகளால் திட்டி, பொறியாளரை தாக்கி கழட்ட செய்துள்ளார்.

இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi thirunavalur DMK subramaniyan video issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->